இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Ponniyin Selvan 2 Nandhini: ஐஸ்வர்யா ராய் பச்சனின் சொத்து மதிப்பு விபரம் அறிந்த அனைவரும் வியந்து போய் அது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா ராய்உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் நடிகையானார். பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றார். ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு எத்தனையோ பேர் உலக அழகிப் பட்டம் வென்றுவிட்டார்கள். ஆனாலும் உலக அழகி என்றாலே பலருக்கும் இன்றும் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான்.
ஜான்வி கபூர்தாவணி போட்ட தீபாவளி….திருப்பதி கோயிலுக்கு வந்த ஜான்வி கபூர்!
ஆராத்யாகோலிவுட், பாலிவுட் தவிர்த்து ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். உலகம் முழுவதும் பிரபலமான அவர் பல முன்னணி பிராண்டுகளின் அம்பாசிடராக இருக்கிறார். படங்கள் தவிர்த்து விளம்பர படங்கள் மூலமும் கை நிறைய சம்பாதிக்கிறார். அழகியும், நடிப்பு ராட்சசியுமான ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார்.
சொத்துஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு குறித்த விபரம் வெளியாகியிருக்கிறது. ஐஸ்வர்யா ராய்க்கு பல பங்களாக்கள், நிலம் இருக்கிறது. மேலும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஆடி ஏ8எல் உள்பட பல சொகுசு கார்கள் வைத்திருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 776 கோடி மட்டுமே என தகவல் வெளியாகியுள்ளது. படம் ஒன்றுக்கு ரூ. 12 கோடி சம்பளம் வாங்குகிறார் ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் 2தன் குருவான மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் நந்தினி, மந்தாகினியாக நடித்தார் ஐஸ்வர்யா. அதில் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டாம் பாகத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு ரூ. 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நந்தினிPonniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 எப்படி?: ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக்கின் அசத்தல் விமர்சனம்பொன்னியின் செல்வன் 2 படம் பார்க்கும் அனைவரும் ஐஸ்வர்யா ராய், விக்ரமின் நடிப்பை தான் பாராட்டுகிறார்கள். நந்தினியாக வேறு எந்த நடிகையாலும் இந்த அளவுக்கு நடிக்க முடியாது என விமர்சனம் எழுந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் 2 படம் பார்த்த அபிஷேக் பச்சனும் பாராட்டி ட்வீட் செய்தார். தன் மனைவியின் நடிப்பை பற்றி பெருமைப்பட்டார்.
த்ரிஷாபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டும் என்றதும் நந்தினியாக நடிக்கிறேன் என்று மணிரத்னத்திடம் கூறியிருக்கிறார் த்ரிஷா. ஐஸ்வர்யா ராயால் மட்டுமே நந்தினியாக நடிக்க முடியும். அவரை ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டோம். உன் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டாராம் மணிரத்னம். நந்தினியாக ஐஸ்வர்யா ராய் தான் சரியாக இருப்பார் என த்ரிஷாவும் ஒப்புக் கொண்டார்.
Trisha: குந்தவை அல்ல நந்தினியாக நடிக்க ஆசைப்பட்ட த்ரிஷா: நோ சொன்ன மணிரத்னம்
ஜெயம் ரவிபொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்த ஜெயம் ரவி 100 சதவீதம் ஐஸ்வர்யா ராய் ரசிகன். ஹைதராபாத்தில் நடந்த பொன்னியின் செல்வன் 2 பட விளம்பர நிகழ்ச்சியில் அதை தெரிவித்தார். ஜெயம் ரவி சொன்னதை கேட்டு ஐஸ்வர்யா ராய் லைட்டா வெட்கப்பட்டார். பொன்னியின் செல்வன் 2 படக்குழுவிலேயே ஐஸ்வர்யா ராய்க்கு ஏகப்பட்ட தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள்.
Ponniyin Selvan 2: ஐஸ்வர்யா ராயை அப்படி வெட்கப்பட வைத்த ஜெயம் ரவி: வீடியோவை பாருங்க