சென்னை: விஜய் – அஜித் இருவருமே கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களாக வலம் வருகின்றனர்.
இவர்களில் அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்ட பின்னரும் அவருக்கு தனி மாஸ் இருக்கிறது.
ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அஜித்துடன் நடித்த நடிகர்களும் அவர் பற்றி பல நினைவுகளை அடிக்கடி கூறி வருகின்றனர்.
அந்த வரிசையில், பிரபல வில்லன் நடிகர் சம்பத் ராம் விஜய், அஜித் இருவர் குறித்தும் மனம் திறந்துள்ளார்.
விஜய் மீது வில்லன் நடிகர் வேதனை:ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த முதல்வன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சம்பத் ராம். இந்தப் படத்தில் சப் இன்ஸ்பெக்டராக என்ட்ரி கொடுத்த சம்பத் ராம், தொடர்ந்து வல்லரசு, தீனா, ரமணா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், திருப்பாச்சி, ஆதி என பல படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கேங்கில் ஒருவராக நடித்திருந்தார்.
ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நெகட்டிவ் ரோல்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் பேட்டிக் கொடுத்த போது, விஜய், அஜித் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். விஜய்யுடன் புலி படத்தில் வேதாளம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சம்பத் ராமிடம் நீங்கள் யார் என கேட்டுள்ளார் விஜய்.
திருப்பாச்சி, ஆதி, போக்கிரி, வேலாயுதம் போன்ற படங்களில் விஜய்யுடன் நடித்திருந்தும் சம்பத் ராமை யார் எனத் தெரியவில்லையாம் விஜய்க்கு. இந்தப் படங்களில் விஜய்யுடன் சண்டைப் போட்டுள்ளதை நினைவுப்படுத்திய பின்னரே அவருக்கு சம்பத் ராம் யார் என தெரியவந்துள்ளது. இதனால் நொந்து நூடுல்ஸான சம்பத் ராம், இதுகுறித்து தனது நண்பர்களிடம் புலம்பினாராம்.
விஜய் எப்போதும் யாரையும் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார். ஆனால், என்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டார் என வேதனைப்பட்டுள்ளார். ஆனால், அஜித் விஜய் மாதிரி இல்லாமல், ஒருமுறை பார்த்ததுமே எளிதாக பழகுவதோடு நினைவில் வைத்துக்கொள்வாராம். அஜித்துடன் நடித்த முதல் படத்திலிருந்து இப்போது வரை பார்க்கும் இடமெல்லாம் எப்படி இருக்கீங்க சம்பத் என கேட்பார்.
அதேபோல், வீட்டில் அனைவரும் நல்லா இருக்காங்களா எனவும் நலம் விசாரிப்பாராம். அஜித் அப்படி கேட்கும் போதெல்லாம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வளவு பெரிய ஹீரோவான பிறகும் ஒரு சாதாரண வில்லன் நடிகரை பார்த்து நலம் விசாரிப்பது மிகவும் பெருமையாக உள்ளதாக நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். சம்பத் ராமின் இந்த பேட்டியை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.