சென்னை: Kanguva Update (கங்குவா அப்டேட்) கொடைக்கானலில் நடந்துவந்த கங்குவா படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியான சூழலில் அதுதொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகரான சூர்யா தற்போது கதை தேர்வில் கவனமாக இருக்கிறார். அவரது கரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது ஜெய் பீம். ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படம் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. அதேபோல் சூர்யாவுக்கும் மிகச்சிறந்த பெயரை ஜெய் பீம் பெற்றுக்கொடுத்தது.
கங்குவா: ஜெய் பீம் படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42ஆவது நடித்துவருகிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பெரும் பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். 10 மொழிகளில் 3டியில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் சரித்திர கால கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திஷா பதானி கதாநாயகியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்துக்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது.
கங்குவா அர்த்தம் என்ன?: படத்தின் பெயர் பெரும் வரவேற்பைப் பெற்றாலும்; ரஜினி நடித்த Gangwa என்ற படத்தின் பெயரை சற்று மாற்றி கங்குவா என பெயரிடப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்தது. அதேபோல் படத்தின் பெயருக்கு என்ன அர்த்தம் என்பது குறித்தும் ரசிகர்கள் விவாதித்தனர். அதனையடுத்து, கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என படத்தின் இயக்குநர் சிவா விளக்கமளித்திருந்தார்.
இரண்டு பாகங்களாக கங்குவா: இதற்கிடையே கங்குவா படம் 2 பாகங்களாக வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் இரண்டாவது பாகத்துக்கான லீட் இருக்கும் என்று தெரிகிறது. நவம்பரில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த வருடத் தொடக்கத்தில் முதல் பாகம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விறுவிறு ஷூட்டிங்: கங்குவா படத்தின் ஷூட்டிங் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்துவந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதுதான் படத்தின் க்ளைம்கேஸ்க்கான ஷூட்டிங் என்றும் பேச்சு ஓடியது. படத்தை விரைவில் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இறங்குவதற்கு இயக்குநர் சிறுத்தை சிவா ஆயத்தமாகியிருப்பதால் பயங்கர விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்தது.
முடிந்தது கங்குவா ஷூட்டிங்: ஆளே மாறிப்போன சூர்யா: இந்நிலையில் கொடைக்கானலில் நடந்துவந்த கங்குவா ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், ஷூட்டிங் நிறைவடைந்ததை ஒட்டி படக்குழுவினருக்கு சூர்யா கொடைக்கானலில் வைத்தே பிரியாணி விருந்து வைத்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் கங்குவா படத்தில் பணியாற்றிய உதவி சண்டை பயிற்சியாளருடன் அவர் எடுத்துக்கொண்ட படம் வெளியாகியுள்ளது. அதில், சூர்யா பயங்கரமாக எடை ஏற்றியிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சூர்யா ஆளே மாறிவிட்டார். எல்லாம் கங்குவாவால் வந்தது என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.