சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடும் குளிரில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங்.
சூர்யாவுடன் என்ஜிகே, கார்த்தி உடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
அயலான், இந்தியன் 2: நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் சிவகார்த்திகேயன் உடன் அயலான், கமல்ஹாசனின் இந்தியன் 2 என இரு படங்களில் நடித்துள்ள நிலையில், விரைவில் அந்த படங்கள் வெளியாக உள்ளன.
கடந்த ஆண்டு பாலிவுட்டில் 5க்கும் மேற்பட்ட படஙக்ளில் நடித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங். சைத்ரிவாலி படத்தில் காண்டம் டெஸ்ட்டராக நடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
ஆணுறை பற்றிய விழிப்புணர்வும் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தவே அந்த படத்தில் நடித்ததாக ரகுல் ப்ரீத் சிங் கூறியிருந்தார். ஓடிடியில் வெளியான அந்த படம் பாராட்டுக்களை அள்ளியது. ஆனால், பெரிய அளவில் தியேட்டரில் வெளியான படங்கள் எதுவுமே சிறப்பாக ஓடவில்லை.
கடும் குளிரில் பிகினி குளியல்: இந்நிலையில், தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் மைனஸ் 15 டிகிரி குளிரில் வெறும் பிகினி உடையை அணிந்துக் கொண்டு ஐஸ் நதியில் துணிச்சலாக குளியல் போட்ட வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளார்.
வேறலெவல் ஹாட்னஸ்: மினி பிகினி உடையில் வேற லெவல் ஹாட்னஸில் அயலான் பட ஹீரோயினை பார்த்த ரசிகர்கள் அசந்து போய் லைக்குகளையும் ஹார்டீன்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர். நீல நிற பிரின்டட் பிகினியில் கவர்ச்சி பொங்க தரிசனம் காட்டி ரசிகர்களை தகிக்க வைத்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
ஆனால், தான் குளித்தது எந்த இடம் என்பது தனக்கு மட்டும் தான் தெரியும் என்றும் வெளிநாட்டில் அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் நிலையில், இப்படியொரு ஐஸ் பாத் எடுத்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.