சென்னை: பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு கிழிந்த ஷார்ட் டெனிமை அணிந்து கொண்டு கிக்கேற்றும் நடன அசைவுகளை ஆடும் வீடியோவை நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் தனது 22வது பிறந்தநாளை கொண்டாடினார்.
ஷிவானி உடன் ஹோட்டலில் பாலாஜி முருகதாஸும் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட போட்டோக்களை ஷேர் செய்து இருந்தார். மற்றபடி வேறு யாரும் கலந்து கொண்டது போல தெரியாத நிலையில், மீண்டும் காதல் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
பாலாவுடன் பர்த்டே கொண்டாடிய ஷிவானி: சின்னத்திரை நடிகையாக வலம் வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் 3 மனைவிகளில் ஒரு மனைவியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
அந்த படத்தைத் தொடர்ந்து வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டிஎஸ்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஷிவானி நாராயணன் விரைவில் தனது பம்பர் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த மே 5ம் தேதி தனது 22வது பிறந்தநாளை கிராண்ட் ஐடிசி சோழா ஹோட்டலில் கொண்டாடினார். அந்த பிறந்தநாள் பார்ட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானியுடன் நெருங்கி பழகி வந்த பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட போட்டோக்களும் வெளியாகின.
பாலாவுடன் காதலா: நடிகை ஷிவானி நாராயணனும் பிக் பாஸ் பாலாவும் தொடர்ந்து நெருங்கி பழகி வருவதை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் சூப்பர் ஜோடி என்றும் ஆண்டு தோறும் ஷிவானியை மறக்காமல் அவரது பிறந்தநாளில் பாலா பங்கேற்கிறாரே இருவரும் காதலித்து வருகின்றனரா? என கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
கிழிந்த ஷார்ட்ஸ் உடையணிந்து: இந்நிலையில், பிறந்தநாள் முடிந்த நிலையில், ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்திருக்கிறார் ஷிவானி நாராயணன். கிழிந்த குட்டி டவுசரை அணிந்துக் கொண்டு கருப்பு நிற கவர்ச்சி டாப்ஸ் உடன் லேசாக ஆட்டம் போடுவது போல தனது மேனி அழகை காட்டி இளைஞர்களை இம்சை செய்து வருகிறார் இந்த இளம் பியூட்டி குயின்.
ஷிவானியின் அந்த லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் டபுள் மீனிங்கில் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.