Trisha: குந்தவை அல்ல நந்தினியாக நடிக்க ஆசைப்பட்ட த்ரிஷா: நோ சொன்ன மணிரத்னம்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Trisha wish: பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடிக்க ஆசைப்பட்ட த்ரிஷாவிடம் நோ சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.

​பொன்னியின் செல்வன் 2​மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸானது. படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் பார்த்த அனைவரையும் ஆதித்த கரிகாலனும், நந்தினியும் தான் கவர்ந்துவிட்டார்கள். நந்தினி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய் பச்சனை தவிர வேறு யாரும் சரிபட்டு வர மாட்டார் என விமர்சனம் எழுந்துள்ளது.
ஐஸ்வர்யா தத்தாமேடையில் உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா தத்தா!
​த்ரிஷா​பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்தார் த்ரிஷா. படம் குறித்து பேச மணிரத்னம் அழைத்ததுமே நந்தினியாக நடிக்க விரும்புகிறேன் என கூறியிருக்கிறார். அது முடியாது. முதல் வேளையாக நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்தோம். அவரால் மட்டுமே நந்தினியாக நடிக்க முடியும் என த்ரிஷாவிடம் கூறியிருக்கிறார் மணிரத்னம்.
​குந்தவை​நந்தினி கதாபாத்திரம் தனக்கு பிடிக்கும் என்பதால் மணிரத்னத்திடம் தன் ஆசையை வெளிப்படுத்தினார் த்ரிஷா. ஆனால் ஐஸ்வர்யா ராயால் மட்டுமே நந்தினியாக நடிக்க முடியும் என மணிரத்னம் சார் சொன்னது மிகவும் சரி என பேட்டி ஒன்றில் தெரிவித்தார் த்ரிஷா.

​மணிரத்னம்​நந்தினிக்கும், குந்தவைக்கும் இடையே எப்பொழுதும் ஒரு பனிப்போர் நடக்கும். அதனால் செட்டில் ஐஸ்வர்யா ராயுடன் சிரித்துப் பேசிப் பழகாதே என த்ரிஷாவிடம் கூறியிருக்கிறார் மணிரத்னம். ஆனால் த்ரிஷாவோ ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து சந்தோஷமாக செல்ஃபி எடுத்து வெளியிட்டார். மேலும் பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சியின்போதும் அவர்கள் இருவரும் சேர்ந்து புதைப்படம் எடுத்தனர். இரண்டுமே வைரலானது.

​Trisha: ஐஸ்வர்யா ராயை பார்ப்பதா, த்ரிஷாவை பார்ப்பதானே தெரியல: ஒரே ஃபிரேமில் எக்கச்சக்க அழகு

​ஜெயலலிதா​குந்தவை என்றாலே கம்பீரம், அறிவாளி. நீ த்ரிஷாவாக இருப்பதை முதலில் நிறுத்து. மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவாக மாறு என்று கூறியிருக்கிறார் மணிரத்னம். ஜெயலலிதா அம்மா எப்படி நடப்பார், பேசுவார் என்பதை வீடியோக்கள் மூலம் பார் என்று மணிரத்னம் சொல்ல அதையே செய்திருக்கிறார் த்ரிஷா. குந்தவையிடம் தெரிந்த கம்பீரம் ஜெயலலிதா அம்மாவின் கம்பீரமாகும்.

​Trisha: குந்தவை த்ரிஷாவின் கம்பீரத்துக்கு காரணம் நம்ம ஜெயலலிதா அம்மா தான்​
​விளம்பரம்​பொன்னியின் செல்வன் 2 படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்தார் மணிரத்னம். ஜெயம் ரவி, சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பல்வேறு நகரங்களுக்கு சென்று படத்தை விளம்பரம் செய்தார்கள். ஐஸ்வர்யா ராயை கண்ணிலேயே காட்ட மாட்டீர்களா என ரசிகர்கள் கேட்ட நிலையில் ஹைதராபாத் நிகழ்ச்சியில் அழகுப் பதுமையாக கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய்.

​அழகு​பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகளில் அனைவரையும் கவர்ந்தவர் த்ரிஷா தான். அவர் என்ன உடை அணிந்து வந்தாலும் அழகாக இருந்தது. சுடிதாரிலும் சொக்க வைத்தார். 40 வயதிலும் த்ரிஷா என்னம்மா அழகாக இருக்கிறார் என ரசிகர்கள் வியந்தார்கள். பொன்னியின் செல்வன் 2 வேலை முடிந்துவிட்டதால் லியோ படப்பிடிப்புக்கு திரும்பிவிட்டார் த்ரிஷா.
​லியோ​Leo: ஆர்டர் போட்ட லியோ லோகேஷ் கனகராஜ்: பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் ‘குந்தவை’த்ரிஷாலோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் தளபதி விஜய்யின் மனைவியாக நடிக்கிறாராம் த்ரிஷா. படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் என ஒரு வில்லன் பட்டாளமே இருக்கிறது. படத்தின் கதை எல்.சி.யூ.வாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் தான் லியோவில் விஜய் சேதுபதி இல்லை என்பதை அறிந்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.