இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
முன்னிலைஷங்கரின் உதவி இயக்குனராக தன் திரைப்பயணத்தை துவங்கிய அட்லீ இன்று தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட் வரை சென்றுள்ளார். ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ தன் முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடினார். அதன் பிறகு தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த அட்லீ தற்போது ஷாருக்கானின் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகின்றார். யோகி பாபு, நயன்தாரா, விஜய் சேதுபதி என பலர் நடிக்கும் இப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் என்ட்ரி கொடுக்கின்றார் அட்லீ
ஹாட்ரிக்ராஜா ராணி என்ற படத்திற்கு பிறகு விஜய்யை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றார் அட்லீ. கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் மற்றும் அட்லீயின் காம்போவில் உருவான தெறி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து இவர்கள் காம்போவில் அடுத்ததாக வெளியான மெர்சல் திரைப்படமும் மெகாஹிட் வெற்றியை பெற மூன்றாவது முறையாக இவர்கள் பிகில் படத்தின் மூலம் இணைந்தனர். என்னதான் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து விஜய்யின் மார்க்கெட் உயர ஒரு காரணகர்த்தாவாக இருந்துள்ளார் அட்லீ. மேலும் விஜய்யின் ஆஸ்தான இயக்குனராகவும் அட்லீ இருந்து வருகின்றார்
ஜவான்பிகில் படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜவான். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு அட்லீயின் இயக்கத்தில் அதுவும் ஷாருக்கானின் திரைப்படம் வெளியாகவுள்ளதால் இபபடத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி ஜவான் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. VFX பணிகளின் காரணமாக இப்படம் தள்ளிப்போனதாக தகவல்கள் வருகின்றன. என்ன இருந்தாலும் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் குறையவில்லை. அதன் படி மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிடித்த படங்கள்இந்நிலையில் சமீபகாலமாக ஷாருக்கான் அவ்வப்போது ரசிகர்களிடம் ட்விட்டரில் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு ஜாலியாக ஓப்பனாக பதிலளித்தார் ஷாருக்கான். அதன் படி ரசிகர் ஒருவர் விஜய் மற்றும் அட்லீயின் காம்போவில் வெளியான படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என ஷாரூக்கானிடம் கேள்வி கேட்டிருந்தார் . அதற்கு பதிலளித்த ஷாருக்கான் , தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தார். மேலும் அப்படங்களில் இருந்து ஜவான் வித்யாசமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார் ஷாருக்கான். தற்போது இந்த ட்வீட் தான் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது