அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் விடாமுயற்சி!
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த நிலையில் அஜித்தின் 62வது படத்தை மகிழ்திருமேனி இயக்குவதாக கடந்த மே ஒன்றாம் தேதி லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது அஜித்தின் 62வது படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பை 70 நாட்களில் மின்னல் வேகத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளாராம் மகிழ் திருமேனி.
அதோடு அஜித்குமார் 40 நாட்களில் தனக்கான காட்சிகளை படமாக்கி விட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாராம். அதனால் முதல் கட்டமாக அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடிக்க திட்டமிட்டுள்ளார். நான்கு மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்து இறுதிக்கட்ட பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ள மகிழ்திருமேனி, அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் தினத்தில் விடாமுயற்சியை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளாராம். அந்த வகையில் இப்படத்தில் அஜித்தின் ‛வி' செண்டிமென்ட் மீண்டும் தொடர்வதோடு, கடந்த பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தின் வெற்றி காரணமாக மீண்டும் விடாமுயற்சி படத்தையும் பொங்கல் திருநாளில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.