அமெரிக்காவில் வணிக வளாகத்தில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
டல்லாஸ் நகரில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மாலில், 33 வயது இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் புகுந்து அங்கிருந்த மக்களை நோக்கி சரிமாரியாக சுடத் தொடங்கினார். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இதையடுத்து மாலின் பாதுகாவலர் அந்த நபரை சுட்டு வீழ்த்தினார். இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தில் உயிரிழந்த 9 பேரில் இந்தியாவை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணான ஐஸ்வர்யா தட்டிகொண்டாவும் ஒருவர். இவர், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நீதிபதியாக உள்ளார்.
ஐஸ்வர்யா தனது முதுகலை பட்டத்தை அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முடித்துவிட்டு, அங்கே தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தனது நண்பர்களுடன் மாலிற்கு சென்றுள்ளார்.
அப்போது தான் கோர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஐஸ்வர்யாவின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
newstm.in