சென்னை: ஓ பன்னீர் செல்வம் – டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இவர்களது சந்திப்பால் அதிமுகவிற்கு எந்த சேதாரமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஒ பன்னீர் செல்வம் ஒருபக்கம் சட்ட போராட்டங்களை நடத்திக்கொண்டே மற்றொரு பக்கம் மக்கள் மன்றத்தில் நாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபிப்போம் எனக் கூறி வருகிறார். இதன்படி திருச்சியில் அண்மையில் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.
அதேபோல், கொங்கு மண்டலம் உள்பட 5 இடங்களில் ஓ பன்னீர் செல்வம் மாநாடு நடத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில், இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தார். டிடிவி தினகரனின் வீட்டிற்கு சென்று ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பொது ஓ பன்னீர் செல்வம் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்ட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தார்.
ஓ பன்னீர் செல்வம் – டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இவர்களது சந்திப்பால் அதிமுகவிற்கு எந்த சேதாரமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த வைகை செல்வன் கூறியதாவது:-
அதிமுக சரியான பாதையில் நேரான பாதியில் தெளிவான பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து சட்டபோராட்டத்திலும் தனது நிலைப்பாடுகளிலும் ஓபிஸ் தோல்வி அடைந்தார். அமமுகவில் இருந்து மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் சாரை சாரையாக தாய்கழகத்தில் இணைந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட வேளையில் தான் இருவரும் சந்தித்துள்ளார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம். தர்மயுத்தம் வேண்டும் என்று போராடியவர்கள் மீண்டும் சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பால் அதிமுகவிற்கு எந்த பின்னடைவும் இல்லை. வாக்கு வங்கிக்கு எந்த சேதரமும் ஏற்பட போவது இல்லை” இவ்வாறு அவர் கூறினார்.