ஈரானில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கிலேற்றப்பட்டுள்ள 194 பேர்கள்
ஈரானில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 194 பேர்கள் தூக்கிலேற்றப்பட்டுள்ளதாக ஈரான் மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஈரானில் 42 பேர்கள் தூக்கிலேற்றப்பட்டுள்ளனர்.
@getty
இதில் பாதி பேர் ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த 42 பேர்களில் பெரும்பாலானோர் போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கியவர்கள் என்றே கூறுகின்றனர்.
ஆனால் ஈரான் நிர்வாகம் திட்டமிட்டே பலூச் சிறுபான்மை மக்களை இலக்கு வைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
மேலும், சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி இரட்டை குடியுரிமை கொண்ட ஈரானியர்களும் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
@getty
மட்டுமின்றி, ஸ்வீடன்-ஈரானிய இரட்டை குடியுரிமை கொண்ட ஹபீப் ஃபராஜோல்லா சாப் என்பவர் ஸ்வீடன் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார்.
டசின் கணக்கான மக்களைக் கொன்ற
2018ல் தெற்கு மாகாணமான குசிஸ்தானில் இராணுவ அணிவகுப்பின் போது டசின் கணக்கான மக்களைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் சாப் இருந்ததாக ஈரானிய சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
முன்னதாக, ஜனவரி மாதம் ஈரானின் முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சர் அலிரேசா அக்பரி தூக்கிலிடப்பட்டார்.
பிரித்தானிய அரசாங்கத்திற்கு அணு ஆயுத ரகசியங்களை கைமாறினார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
Credit: AP/REX/Shutterstock
ஈரான் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ல் மட்டும் ஈரானில் 582 கைதிகள் தூக்கிகிடப்பட்டுள்ளதாகவும், இது 2015க்கு பின்னர் மிக அதிக எண்ணிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.