நீண்ட கால இராஜதந்திர தொடர்பை வலுப்படுத்துவதற்காக இந்திய விமானப்படையினால் நன்கொடையாக, சீன துறைமுக விமானப்படைக் கல்விக் கல்லூரியில் புதிய கோட்போர் கூடமொன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது.
இவ்வைபவம் இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மாஷல் விவேக் ராம் சௌத்ரி மற்றும் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரண தலைமையில் இடம்பெற்றது.
நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கேட்போர் கூடத்தில் 700பேருக்கு கேட்போர் கூட வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இம்மண்டப ஒலி மற்றும் ஒளி வசதியுடனான மேடை மற்றும் பல்கனியுடனான பூரண குளிரூட்டப்பட்ட பிரதான மண்டபம், கட்டுப்பாட்டு அறை உட்பட சகல வசதியுடன் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தைப் பூரணப்படுத்துவதற்கு 6மாத காலம் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சர்வ சமய ஆசீர்வாதங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் விமானப்படை சேவை, பெண்கள் நலன்புரி இந்திய அமைப்பின் தலைவி, நீதா சௌத்ரி, இலங்கை அமைப்பின் தலைவி சாமினி பதிரண, பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் எயார் வயிஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க, பணிப்பாளர் நாயகம் பயிற்சி எயார் வயிஸ் மாஷல் பந்து எதிரிசிங்க, சீன துறைமுக விமானப்படை கல்விக் கல்லூரியின் கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் தேஷப்பிரிய சில்வா உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.