ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்: முதல்வர் ஸ்டாலின் திறப்பு

1945ம் ஆண்டு துவங்கப்பட்ட ஏவிஎம் ஸ்டூடியோஸ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. சமீபகாலமாக திரைப்படத் தயாரிப்பிலிருந்து இந்த நிறுவனம் விலகியுள்ளது. இறுதியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான 'தமிழ்ராக்கர்ஸ்' என்ற வெப் தொடரை ஏவிஎம் தயாரித்திருந்தது.

சென்னை, வடபழனியில் அமைந்துள்ள ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி இப்போது புதுப்பிக்கப்பட்டு, திருமண மண்டபமாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்டூடியோவின் 3வது அரங்கில், ஆரம்பகால சினிமாவில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்களை கொண்ட ஹெரிடேஜ் மியூசியமாக ஏவிஎம் நிர்வாகம் மாற்றியுள்ளது. இதில் அரிய கேமராக்கள், பழங்கால கார்கள், சினிமா உபகரணங்கள், புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த மியூசியத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஏ.வி.எம்.சரவணன், அவரது மகன் குகன், நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.