சென்னை : நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநரிடம் ஓவர் சீன் போட்டதால் தமிழில் படவாய்ப்பை இழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அழகான நடிகையான அனுபமா பரமேஸ்வரன் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் நடித்தது என்னமோ ஓரிரு படமாக இருந்தாலும், ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக இருக்கிறார்.
அனுபமா பரமேஸ்வரன் : 2015 ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளிய பிரேமம் படத்தில், நிவின் பாலி காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலில் பல கோடியை அள்ளியது.
கொடி படத்தில் : இப்படம் மலையாளத்தை விட தமிழில் வெற்றி பெற்றதால், அனுபமாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இங்கேயும் உருவானது. இப்படத்திற்கு பின் தமிழில், தனுஷ் இரண்டு வேடத்தில் நடித்த கோடி படத்தில் அனுபமா அறிமுகம் ஆனார். இப்படத்தில் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.
வெற்றி பெறவில்லை : கோடி படம் வெற்றி பெற்ற போதும், அனுபமாவுக்கு தமிழில் எந்த வாய்ப்பும் வராததால், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்த அனுபமா ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவான தள்ளிப்போகாதே படத்தில் அதர்வாவுடன் ஜோடி போட்டுள்ளார். இப்படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.
இதுதான் காரணம் : ஆனால், கொடி படத்திற்கு பிறகு அனுபமாவுக்கு தமிழில் பட வாய்ப்பு வந்தது, ஆனால், அவர் கதை கேட்பதை விட சம்பள விஷயத்தில் குறியாக இருந்ததால், பட வாய்ப்பை இழந்ததாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் ஒருவர் அனுபமாவிடம் கதை சொல்ல சென்று இருக்கிறார். அப்போது ஓவர் சீன் போட்டது மட்டுமில்லாமல், சம்பளத்தையும் அதிகமாக கேட்டதால் கடுப்பான இயக்குநர் கதையை சொல்லாமலே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அனுபமா தமிழில் பட வாய்ப்பை இழக்க இது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.