லண்டன்: இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பரபரப்பை கிளப்பிவிட்டு வருகிறது.
நேற்று முன்தினம் அதாவது மே 6ம் தேதி இங்கிலாந்தில் சார்லசின் முடிசூட்டு விழா பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது.. இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது.
இதற்காக ஒட்டுமொத்த இங்கிலாந்தும் விழாக்கோலம் பூண்டிருந்தது.. காரணம், 70 வருடங்கள் கழித்து பாரம்பரிய விழா மீண்டும் அந்நாட்டில் நடப்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் போடப்பட்டிருந்தது.
பிரம்மாண்டம்: இந்த முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.. அத்துடன், 2 ஆயிரம் பேருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. முடிசூட்டு விழாவிற்காக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து சார்லஸ் – கமீலா பார்கர் இருவரும் குதிரைகள் பூட்டப்பட்ட தங்க ரதத்தில் விழா நடக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு கெத்தாக வந்திறங்கினர்.. பாரம்பரிய முறைப்படி கையில் செங்கோல் ஏந்தி மன்னர் 3ம் சார்லஸ், மன்னருக்கான அரியணையில் அப்போது அமர்ந்தார்.. அவருக்கு பக்கத்தில் ராணி கமீலா பார்கர் உட்கார்ரந்தார்..
பைபிள் வாசகம்: பின்னர், ஆட்சியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன் என்று அனைவர் முன்னிலையிலும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார் சார்லஸ்… மன்னருடைய முடிசூட்டு விழா ஒரு கிறிஸ்துவ முறையில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பைபிளிலிருந்து ஒரு பகுதியை வாசித்தார். இறுதியில், அரியணையில் மூன்றாம் சார்லஸ் அமரவைக்கப்பட்டு, பாரம்பரியமிக்க ஸ்பூனில் பிரத்யேக எண்ணெய் மன்னரின் தலையில் விடப்பட்டது.
மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, “சூப்பர்டூனிக்கா” எனப்படும் தங்க அங்கி அணிந்து, கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் மன்னருக்கு சூட்டப்பட்டது. மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு அரச குடும்பத்தின் வீரவாள், உலக உருண்டை, மோதிரம், செங்கோள் ஆகியவை வழங்கப்பட்டன.
தெரு பார்ட்டிகள்: இந்த விழா சிறப்பாக நடந்து முடிந்தாலும், முக்கிய நகரங்களின் வீதிகளில் குட்டி குட்டி பார்ட்டிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அந்த வீடியோவில், மன்னர் மூன்றாம் சார்லஸ் முடி சூட்டிக் கொள்ளும்போது மர்ம உருவம் ஒன்று நடந்து செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
கருப்பு நிறத்தில் உள்ள அந்த உருவம், அரிவாளை போன்ற ஒன்றை சுமந்து கொண்டு செல்கிறது.. ஒரு நீண்ட தடியை சுமந்துக்கொண்டும் செல்கிறது. முகமூடி அணிந்துள்ளது.. இதனை பார்த்த நெட்டிசன்கள் மன்னரின் முடிசூட்டு விழாவில் பேய் ஒன்று பங்கேற்றதாக சொல்லி, கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..
மர்மநபர்: ஆனால், இதற்கு மறுப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.. ஒருவேளை, மத குருக்களின் உறுப்பினராக அந்த நபர் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.. வேறு சிலரோ, இது அமானுஷ்யம்தான் என்கிறார்கள்.. ஆளுக்கு ஒருபக்கம் வெவ்வேறு கருத்துக்களை சொல்லியுள்ள நிலையில், இந்த வீடியோவை இதுவரை 3.6 மில்லியன் பேர் பார்த்துவிட்டார்களாம்.. அந்த மர்ம உருவம் யார் என்பது இப்போது வரை தெரியவில்லை..!!