கோதுமை மாவிற்காக சேர்க்கப்பட்டுள்ள மூன்று ரூபா எனும் சுங்க சலுகை நீக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கோதுமை மாவின் விலை எக்காரணத்திற்காகவும் மாற்றம் செய்யப்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
அவிஸ்ஸாவெல பிரதேசத்தில் (07) நேற்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிட்ட அரிசிக்கு பிரதான மாற்றீடான கோதுமை மாவிற்காக வழங்கப்பட்ட கிலோவிற்கு மூன்று ரூபா சுங்க சலுகை மீண்டும் நீக்கப்பட்டமை ஊடாக, விவசாயிகளின் வாழ்வாதார மட்டத்தை 90வீதம் பாதுகாப்பதற்காக கோதுமை மாவின் விலை முகாமைத்துவம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.