சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி இருந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் பெங்களூரு வீரர் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. அது அப்படியே நேரலையில் ஒளிபரப்பானது. அதை அடிப்படையாக வைத்து மென்பொருள் துணை கொண்டு கேம் ஒன்றை வடிவமைத்துள்ளார் டெக் ஆர்வலர் ஒருவர்.
‘அவர்கள் இருவரும் முறைப்படி மோதி விளையாட நான் ஒரு கேமை வடிவமைத்துள்ளேன்’ என டெக் ஆர்வலர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அதில் கோலி மற்றும் கம்பீர் என இருவரும் தங்கள் ஐபிஎல் அணியின் ஜெர்சியை அணிந்துள்ளனர். அதில் பயனரை தங்கள் அணியை தேர்வு செய்ய சொல்கிறது. கோடினை உருவாக்கியவர் கோலியின் அணியை தேர்வு செய்கிறார். அதன் பிறகு இரு அணியின் வீரர்களும் களத்தில் தங்கள் கைகளில் உள்ள பேட்டை கொண்டு மோதிக் கொள்கின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ‘கிரிக்கெட் இப்படித்தான் இனி ஆட வேண்டும்’, ‘அற்புதமான படைப்பு திறன்’, ‘இது ரொம்ப கிரேசி’ என கமெண்ட் செய்துள்ளனர். அதே ஏறத்தில் சிலர் இது குறித்து மாற்றுக் கருத்தையும் முன்வைத்துள்ளனர். 1.10 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் லக்னோ அணி வெற்றி பெற்றாக அறிவிக்கப்படுகிறது.
Wtf!! Who made this?? #ViratKohli
#IPL2023 #ICCRankings pic.twitter.com/Mm50PjQK8b
— punch on your face (@sagbansal) May 6, 2023