ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
ஷிகர் தவான் அரைசதம்
ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது.
ஷிகர் தவான் 57 ஓட்டங்களும், ஷாருக் கான் 21 (8) ஓட்டங்களும் விளாசினர்.
தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளும், சுயாஷ் சர்மா மற்றும் நிதிஷ் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
@PunjabKingsIPL (Twitter)
BCCI
கொல்கத்தா அணி மிரட்டல்
அதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஜேசன் ராய் 38 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து நிதிஷ் ராணா 38 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசினார்.
Image: AP
அடுத்து ஆந்த்ரே ரசல் மற்றும் ரிங்கு சிங் அதிரடியில் மிரட்டினர்.
சாம் கரண் வீசிய 19வது ஓவரில் ரசல் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் கொல்கத்தா அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திரில் வெற்றி
கடைசி 2 பந்துகளில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ரசல் ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் பரபரப்பு உண்டானது.
அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டினார்.
Image: AP
இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.
வாணவேடிக்கை காட்டிய ஆந்த்ரே ரசல் 23 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்களும், ரிங்கு சிங் 10 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்கள் விளாசினர்.
@BCCI