சல்மான் கான் படத்தில் ஒரு காட்சிக்காக ரூ.30 கோடி செலவு!
ஹிந்தி நடிகர் சல்மான்கான் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‛கிஷி கி பாய் கிஷி கி ஜான்'. தற்போது டைகர் படத்தின் மூன்றாம் பாகத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார். முதல் இரண்டு பாகத்திலும் கதாநாயகியாக நடித்த கத்ரினா கைப் தான் டைகர் 3ம் பாகத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இயக்குனர் மனிஷ் சர்மா இயக்கும் இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்போது மும்பையில் இந்த படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான சண்டை காட்சியொன்றை படமாக்க உள்ளனர். அதில் நடிகர் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு சண்டை காட்சியை படமாக்க மட்டும் தயாரிப்பாளர் ரூ.30 கோடி செலவில் பிரமாண்டமான ஜெயில் செய்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.