நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதிக்கான யூஜி படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தாண்டுக்கான மருத்துவ படிக்கு சேர்க்கைக்கு நேற்று (மே8)
நுழைவு தேர்வு நடந்து முடிந்தது. இதனை எழுத நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவர்கள், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவிகள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வுக்கு வரும் மாணவ, மாணவிகளிடம் கடுமையான கட்டுப்பாடுகள் பிணைப்பற்றப்பட்டு வருகிறது. 2 நிமிஷம் தாமதமாக வந்தாலும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
மாணவ, மாணவிகள் அழுது புரண்டாலும் பெரும்பாலான சமயத்தில் அதிகாரிகள் அனுமதி வழங்காததால் நீட் தேர்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் காத்திருந்தாலும் பரவாயில்லை என்று பல மணி நேரத்துக்கு முன்னாலேயே அவரவர் தேர்வு மையங்களுக்கு வந்து விடுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நீட் எழுத வேண்டிய மாணவி தவறான தேர்வு மையத்துக்கு வந்து சிரமத்துக்கு ஆளாகியுள்ளார். அவரது நிலையை கண்ட ஆவடி போக்குவரத்து காவலர்கள் மாணவியின் தேர்வு மையத்தை அறிந்துகொண்டு அவரை காவல் வாகனத்திலேயே கொண்டுபோய் விட்டுள்ளனர்.
இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள ஆவடி போக்குவரத்து காவல்துறை ” நேற்று நடந்த
தேர்வில் தேர்வு எழுத வந்த ஆனந்தி என்ற மாணவி வழி தவறி வேறு தேர்வு மையம் சென்றதால் தக்க சமயத்தில மீட்டு தனது Avadi Traffic Patrol வாகனத்தில் ஏற்றி சென்று மாணவி தேர்வு எழுதுவதற்கு ஆவடி போக்குவரத்து காவலர்கள் HC தனசேகரன் மற்றும் Gr1 தினேஷ் குமார சாமி உதவி செய்தனர்” என தெரிவித்துள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன.