நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ராஜஸ்தானில் இருந்து லித்தியம் தொடர்பாக மற்றொரு முக்கிய செய்தி வெளிவந்தது.