புதுடில்லி,காற்று மாசை தடுக்கும் வகையில், 10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை உள்ள நகரங்களில், 2027க்குள், டீசலில் இயங்கும் கார்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்க, நிபுணர் குழு பரிந்துரை செய்து உள்ளது.
காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நிபுணர் குழு
இது தொடர்பாக, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் முன்னாள் செயலர் தருண் கபூர் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் குழு தன் பரிந்துரையை, கடந்த பிப்.,ல் தாக்கல் செய்து உள்ளது. ஆனால், இந்த அறிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை.
நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள்:
மக்கள் தொகை, 10 லட்சத்துக்கும் மேல் உள்ள நகரங்களில், வரும், 2027க்குள், டீசலில் இயங்கும் கார்கள் பயன்பாட்டுக்கு முழு தடை விதிக்க வேண்டும்.
மின்சாரம் அல்லது ‘காஸ்’ வாயிலாக இயக்கப்படும வாகனங்களுக்கு மாற வேண்டும்.
‘இன்டர்னல் கம்பஷன் இன்ஜின்’ உள்ள இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை, 2035க்குள் படிப்படியாக முழுதுமாக விலக்கி கொள்ள வேண்டும்.
முக்கியத்துவம்
அடுத்த, 10 ஆண்டு களுக்குள், எந்த ஒரு நகரிலும் புதிய டீசல் பஸ்களுக்கு அனுமதிக்க கூடாது.
மின்சாரம், காஸ் வாயிலாக இயங்கும் வாகனங்களுக்கும், எத்தனால் கலந்த எரிபொருளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்