கடலூர் மாவட்டத்தில் தந்தை இழந்த சோகத்தோடு தேர்வு எழுதிய மாணவி, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 472 மதிப்பெண்கள் பெற்று அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
தந்தையை இழந்த மகள்
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், படித்த கிரிஜா என்ற 12ஆம் வகுப்பு மாணவி கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி வேதியியல் தேர்வு எழுதினார்.
@news18
அன்று அதிகாலை கிரிஜாவின் தந்தை ஞானவேல் திடீரென உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தந்தை இறந்த அன்றே தன் அவரது கனவை நிறைவேற்றுவேன் என கூறிய கிரிஜா தேர்வு எழுத சென்றுள்ளார். இந்த செய்தி பரவ பலரும் கிரிஜாவின் செயலை பாராட்டினர்.
தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்
இதனை தொடர்ந்து இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முடிவுகள் வெளியான நிலையில், மாணவி கிரிஜா 479 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
@news18
இதை பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் கிரிஜாவின் உறவினர்கள், அவரை ஆரத்தழுவி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கிரிஜா, தனது தந்தை என்னை சிறந்த கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என நினைத்தார், நான் அவரது கனவை நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார்.
@news18
தனது தந்தை உயிரிழந்த பின்னும், சடலத்தை வீட்டில் விட்டு விட்டு தேர்வு எழுத சென்ற கிரிஜாவின் தைரியத்தை, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.