திண்டுக்கல் மாவட்டம் பாரதி புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் நந்தினி, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவி
திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த கூலி தொழிலாளி சரவணகுமார் மற்றும் பாலப்பிரியா தம்பதியின் மகள் நந்தினி, இன்று வெளியான 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய 6 பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் என 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் இதையடுத்து அவர் அளித்த பேட்டியில், என் தந்தை கூலி தொழிலாளியாக இருக்கிறார், நான் எனது வீட்டில் இருந்தே அனைத்து பாடங்களையும் பயின்றேன்.
இந்த மதிப்பெண்ணை பெற எனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நல்லதொரு ஊக்கம் அளித்தனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வெற்றியை எனது பெற்றோர்களுக்கு சமர்பிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
#JUSTIN ||வரலாற்றை உருவாக்கிய திண்டுக்கல் நந்தினி ❤️
ஒருவர் அனைத்து பாடத்திலும் 100/100 பெறுவது இதுவே முதன்முறை.
600/600 மதிப்பெண் எடுத்து மாணவி சாதனை 😍#12thResults | #Publicexam | #Examresults | #TamilNadu | #Nandhini | #Dindigul pic.twitter.com/5BVXpSHRqY
— MuKesh M (@MuKeshM_) May 8, 2023
தமிழ் ஆசிரியர் எனக்கு இன்னொரு அம்மா
தமிழ் ஆசிரியர் அனுராதா என்னுடைய மற்றொரு தாய் போல இருந்தார், எனக்கு சந்தேகம் ஏற்படும் போது எல்லாம் சலிப்பு இல்லாமல் எனக்கு உதவி செய்தார் என குறிப்பிட்டுள்ளார்.
நான் அடுத்ததாக ஆடிட்டர் படிப்பை படிக்க விரும்புகிறேன், என் தந்தையும் அதற்கு தயாராக இருக்கிறார்.
இந்நிலையில் தேர்வு முடிவு வெளியான பிறகு, இன்று காலை தான் படித்த பள்ளிக்கு வந்த நந்தினிக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.