வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: சர்ச்சைக்குரிய, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்குவங்க அரசு தடை விதிதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘லவ் ஜிகாத்’ கருத்தை மையப்படுத்தி, சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற படம் கடந்த மே.5ல், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
இதில், கேரளாவைச் சேர்ந்த ஹிந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, இஸ்லாம் மதத்துக்கு கட்டாயப்படுத்தி மாற்றப்பட்டது,
‘மத நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைக்கும் வகையில், கலவரத்தை துாண்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
மேலும், இந்த பெண்கள் மேற்காசிய நாடான சிரியா மற்றும் தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு, ‘செக்ஸ்’ அடிமைகளாக்கி, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்ற காட்சிகளும் இதில் இருந்தன.
இந்த படத்துக்கு கேரளாவில் உள்ள ஆளுங் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், இப்படத்துக்கு மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் மம்தா கூறியது, தி கேரள ஸ்டோரி , திரிக்கப்பட்ட கதை, பிரசார படம், அமைதியும், மத நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே தி கேரள ஸ்டோரி படம் மேற்குவங்க மாநிலத்தில் தடை செய்யப்படுகிறது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement