தூத்துக்குடி : திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நமச்சிவாயபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் கஜேந்திரன். இவர் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு பள்ளி வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையே கஜேந்திரனுக்கு அவரது பெற்றோர் வரன் தேடி வந்தனர். ஆனால், அவருக்கு எந்த வரணும் அமையவில்லை. இதனால், கஜேந்திரன் தன்னுடன் படித்த நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் உள்ளன.
ஆனால் தனக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று தன் நண்பர்கள் சிலரிடம் புலம்பியுள்ளார். இந்த நிலையில் கஜேந்திரன் தன் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.