பிளஸ்டூ தேர்வு முடிவுகள் | தமிழில் அதிர்ச்சி கொடுத்த மாணவர்கள்! மற்ற பாடங்களில் 100/100 குவித்து சாதனை!

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை 4,33,000 மாணவிகளும், 4 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்களும், 23 ஆயிரத்து 747 தனித்தேர்வுகளும் எழுதினர்.

மொத்தம் 8.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்தப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10.10 மணிக்கு வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் 7,55,451 (94.03%) மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர்  : 96.38% பேரும், மாணவர்கள்  : 91.45% பேரும், சிறைவாசிகள்  : 79 பேரும், மூன்றாம் பாலினத்தவர் அனைவரும் தெறிச்சி பெற்றுள்ளனர்.

தமிழில் இரண்டு பேர் மட்டுமே 100த்துக்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும், ஆங்கிலத்தில் 15 பேரும்,
இயற்பியல் பாடத்தில் 812 பேரும்.
வேதியல் பாடத்தில் 3909 பேரும்,
உயிரியல் பாடத்தில் 1494 பேரும். 
கணிதத்தில் 690 பேரும், தாவரவியல் படத்தில் 340 பேரும், விலங்கியல் 154, கணித அறிவியல் 4618,  வணிகவியல் 5678, கணக்குப்பதிவியல் 6573, பொருளியல் 1760, கணித பயன்பாடுகள் 4051, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் 1334 பேரும் 100த்துக்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அதிக அளவில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக அதிக அளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.