பெருவில் தீ விபத்து 27 பேர் பலி| Fire in Peru kills 27

லிமா, பெருவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 27 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவில், ரேக்யூபா என்ற இடத்தில் ஒரு தங்கச் சுரங்கம் இருக்கிறது.

இங்கு, 100 அடிக்கும் கீழே, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பணியாற்றி வந்தனர். அப்போது திடீரென தீப்பற்றி, சுரங்கம் முழுதும் பரவியது.

இதில், கடும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், உடல் கருகியும் 27 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சுரங்கத்திற்குள் மின் கசிவு ஏற்பட்டதே, தீ விபத்திற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.