டெஹ்ரான், இந்தாண்டில் இதுவரை, 203 பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், முதல் முறையாக மதத்தை இழிவுபடுத்தியதாக ஈரானில் இருவர் துாக்கிலிடப்பட்டனர்.
சீனாவுக்கு அடுத்ததாக, மேற்காசிய நாடான ஈரானில் தான் உலகிலேயே அதிகளவில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இங்கு, 2021ம் ஆண்டில், 333 பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், கடந்தாண்டு 582 பேருக்கு நிறைவேற்றப்பட்டது.
‘ஹிஜாப்’ எனப்படும் முஸ்லிம் பெண்கள் தலை மற்றும் முகத்தை மூடும் துணியை அணிவதில் கடும் கட்டுப்பாடு உள்ளது. இதற்கு எதிராக, ஈரானில் கடந்த சில மாதங்களாக பெரும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், அங்கு துாக்கு தண்டனை நிறைவேற்றுவதும் அதிகரித்து வருகிறது. மதத்தை இழிவுபடுத்திய குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனை குறைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், மதத்தை இழிவுபடுத்தியதாக இரண்டு பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவரை, 203 பேர் துாக்கிலிடப்பட்டு உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement