கோப்பி (Coffee) ஸ்க்ரப் வடிவில் சருமத்திற்கு பெரிதும் நன்மை தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கோப்பியில் உள்ள அமிலங்கள் உங்கள் சருமத்தை ஊட்டமளிக்கிறது, பிரகாசமாக்குகிறது மற்றும் தோலுரிக்கிறது. மேலும் வயதான தோற்றத்தை குறைக்கின்றது.
கோப்பி ஸ்க்ரப் சருமத்திற்கு எவ்வாறு நன்மை தருகின்றது. மேலும் அதை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்துக் கொள்ளலாம்.
கோப்பி ஸ்க்ரப்
- கோப்பி தூள் -01 கப்
- ஏலக்காய் – 02 தே.கரண்டி
- தேங்காய் எண்ணெய் – 03 தே.கரண்டி
- சர்க்கரை – 01 கப்
இவை அனைத்தையும் நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் கை கால் மற்றும் முகத்திலும் பூசி ஊற வைத்து, மிதமான தண்ணீரில் குளிக்க வேண்டும்.
ரோஸ்வாட்டர் கோப்பி ஸ்க்ரப்
ஒரு கப் கோப்பி பொடியில் 02 தே.கரண்டி ரோஸ்வாட்டர் கலந்து ஸ்க்ரப் பண்ணி 30 நிமிடம் முகத்தில் தேய்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
கற்றாழை கோப்பி ஸ்க்ரப்
கற்றாழை ஜெல் 03 தே.கரண்டி மற்றும் கோப்பி தூள் 1 கப் சேர்த்து கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்து, வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
மேலும் கோப்பி தூளை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்துக் கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.