சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரக்ஷிதா சுரேஷ். இவர் தற்போது பல மொழிகளில் பிரபலமான பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் மலேசியாவில் விபத்து ஒன்றில் சிக்கியுள்ள அனுபவம் குறித்து தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் திரையுலகில் பிரபலமான பாடகியாக திகழ்பவர் ரக்ஷிதா சுரேஷ். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல ,முன்னணி இசையமைப்பாளர் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘சொல்’ பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சினிமாவில் படுவாதுடன் வெளி நாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார் ரக்ஷிதா சுரேஷ். அந்த வகையில் மலசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சென்ற போது விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரே தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
PS 2: ரூ.300 கோடி வசூலை கடந்த ‘பொன்னியின் செல்வன் 2’: வெளியான மாஸ் அறிவிப்பு.!
அதில், மிகப்பெரிய விபத்து ஒன்றில் இன்று சிக்கினேன். மலேசியா விமான நிலையம் நோக்கி சென்ற சமயத்தில் கார் சாலை தடுப்பின் மீது மோதியது. அதே வேகத்தில் சாலை ஓரத்தில் போய் விழுந்தது. அந்த ஒருசில நொடிகளில் என் மொத்த வாழ்க்கையும் கண்முன் தோன்றியது. அதிர்ஷ்டவசமாக காரில் ஏர் பேக்குகள் இருந்ததால் உயிர் தப்பினோம்.
இந்த நிகழ்வினால் இன்னும் அதிர்ச்சியில் உள்ளேன். கார் ஓட்டுனர் மற்றும் என்னுடன் வந்த சக பயணிகளும் இந்த விபத்தில் இருந்து தப்பினர். லேசான காயங்கள் மட்டும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. நான் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பலரும் அவருக்கு ஆறுதலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Leo: ‘லியோ’ படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை: லிஸ்ட் பெரிசாகிட்டே போகுதே.!