ரஷ்ய படைவீரர்களின் வெற்றி தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

வருடாந்த ரஷ்ய படைவீரர்களின் வெற்றி தின நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் உள்ள போர் நினைவிடத்தில் வியாழக்கிழமை (மே 04) இடம்பெற்றது.

நேற்று மாலை கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர் அவர்களை ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் அதிமேதகு லெவன் எஸ்.டகர்யன் வரவேற்றார்.

ரஷ்யர்கள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 9ஆம் திகதி “பெரிய தேசபக்தி போரின்” முடிவு தினமாக இந்நிகழ்வை கொண்டாடுகிறார்கள்.

ரஷ்யாவின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான Soslan Fidarov இலங்கை உட்பட 11 நட்பு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட மாபெரும் போரின் ‘தெரியாத சிப்பாயின்’ நினைவாக சிறப்பு சுடருடன் இலங்கைக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ரஷ்ய தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.