இந்திய விமானப் படைக்குச் சொந்தமான MiG-21 போர் விமானம் ஒன்று ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
இன்று (மே 08) காலை வழக்கமான பயிற்சிக்காக சூரத்கர் பகுதியில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், ஹனுமன்கர் மாவட்டத்துக்குள் நுழைந்த போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய அந்த போர் விமானம் பலோல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட பொதுமக்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமானம் விழத் தொடங்கியபோதே அதிலிருந்து விமானி பாராசூட் உதவியுடன் வெளியேறிவிட்டதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அப்பகுதிகள் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடிவிட்டனர். சட்டம் – ஒழுங்கு பிரச்சினை எதுவும் நிகழாமல் இருக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு இந்திய விமானப் படை உத்தரவிட்டுள்ளது.
#WATCH | Indian Air Force MiG-21 fighter aircraft crashed near Hanumangarh in Rajasthan. The aircraft had taken off from Suratgarh. The pilot is safe. More details awaited: IAF Sources pic.twitter.com/0WOwoU5ASi
— ANI (@ANI) May 8, 2023