ராணிப்பேட்டையில் அனுமதி இன்றி வீட்டில் பட்டாசு தயாரித்ததில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே ஆசிரியர் காலனி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய வீட்டில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் சுரேஷ், ராஜேந்திரன் ஆகிய இருவர் பட்டாசு தயாரித்த போது எதிர்பாராத விதமாக பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்களில் தீப்பற்றி திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
இந்த வெடி விபத்தில் சுரேஷுக்கு சொந்தமான வீடு மொத்தமாக இடிந்து தரை மட்டமானது. மேலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு பயனர் படுகாயம் அடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.