ரியல் வழக்கறிஞர்… ரீல் போலீஸ்… : அதிதி பாலன் ‛எக்ஸ்க்ளூசிவ்'

இந்த கேரக்டர் இல்லை எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடித்து அசத்துவோம் என தமிழ் சினிமாவில் 'அருவி'யாக கொட்டி, பேரழகால் திரையுலகை ஆட்சி செய்து, கருமேகங்கள் கலைகின்றன படத்தில் போலீஸாக நடிக்கும் அதிதி பாலன் மனம் திறக்கிறார்…

கருமேகங்கள் கலைகின்றன' படம் குறித்து
இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சானுடன் வேலை பார்த்தது சந்தோஷம். வழக்கமான, எளிமையான கதையுள்ள தங்கர் பச்சான் படம் இது. எமோஷன், பெண்கள், குழந்தைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். அவர் இயக்கம் எப்படி என்று பார்க்க தான் இதில் நடிக்க ஓகே சொன்னேன்..

பாரதிராஜா உடன் பயணித்தது
இந்த படத்தில் நானும், அவரும் சேர்ந்து நடிப்பது போன்று நிறைய காட்சிகள் இருக்கு. இயக்குனராக இருப் பதால் அவர் நடிப்பில் இருந்து நுணுக்கமான விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.

இந்த படத்தில் உங்கள் கேரக்டர் என்ன?
“கண்மணி” என்ற போலீஸ் கேரக்டர் பண்ணியிருக்கேன். படம் முடிச்சு வெளியில் வரும்போது இந்த கேரக்டர் மக்கள் மனதில் நிற்கும். பெரிய இடத்தில் இருந்து கீழ வந்து, எப்படி அடுத்த கட்டம் அவள் போகிறாள். கீழ் நிலைக்கு போனாலும் எப்படி தன்னை விட்டுக் கொடுக் காமல் வாழ்கிறாள் என்று இந்த கதை பேசும். உண்மை சம்பவம் கொஞ்சம் இருக்கு.

சரி… அதிதி படத்தில் ஹீரோ யாருங்க?
பாரதிராஜா தான்…நீதிபதியாக நடித்துள்ளார்.. யோகி பாபு காமெடி பண்ணிசிரிச்சு ரசித்திருக்கிறோம். இந்த படத்தில் எமோஷனலா அப்பாவுக்கும், மகளுக்குமான ஒரு கேரக்டரில் அற்புதமா பண்ணியிருக்காரு.

'அருவி' படம் போல் அதிக வசனங்கள்
இந்த படத்திலும் பெரிய வசனங்கள் இருக்கு. நான் வழக்கறிஞருக்கு . படித்திருக்கிறேன். அங்கே நிறைய மனப்பாடம் செய்ய வேண்டிய விஷயங்கள் இருந்ததால் வசனம் படித்து, பேகம் பிரச்னை இல்லை.

தங்கர் பச்சன் உடன் பயணித்தது எப்படி?
பயந்து தான் போனேன். ரொம்ப கத்துவார்.டென்ஷன் ஆவார் என நினைத்தேன். பொறுமையா சொல்லி கொடுத்தார். எந்த இடத்திலும் கோபமே வரலை. நடிக்க சுதந்திரம் கொடுத்தார்.

'சாகுந்தலம்' படத்தில் நடித்த அனுபவம்
எனக்கு பரதநாட்டியம் ஆட தெரியும். அந்த படத்தில் 'பிரிய மாதா' கேரக்டர் பிடித்தது. அந்த உடைகள், செட் சில விஷயங்கள் எனக்கு ஒரு அனுபவமாக இருந்தது.

தமிழ் தெரிந்தும் தமிழ் படங்களில் இடைவெளி
'அருவி' முடித்த பின் ஒரே மாதிரி கதைகள் வந்தது. அதனால் கதை தேர்வு செய்ய யோசிச்சேன். சட்டம் படிச்சிருக்கீங்க. சோசியல் மெசேஜ் பேசுறிங்கனு சொல்றாங்க. காமெடி பண்ணாலும் சீரியஸாதான் பார்க்குறாங்க. இப்போ வரை நீதி மன்றம் பக்கம் போனதில்ல.

எதிர்கால திட்டம் என்ன?
நல்ல படங்கள் நடிக்க வேண்டும். பரத நாட்டியம் நிகழ்ச்சிகள் மீண்டும் செய்ய வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.