வெறிக்கொண்ட இம்ரான் கான் கட்சியினர்.. பாகிஸ்தானில் தனியாக சிக்கிய மதகுரு -துடிதுடித்து இறந்த கொடூரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மீதே விமர்சன கருத்தை முன்வைத்த மதகுரு ஒருவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் அடித்துக் கொடூரமாக கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பாகிஸ்தானில் வட மேற்கு மாகாணங்களில் ஒன்றான கைபர் பக்துன்குவாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் கடந்த சனிக்கிழமை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் இஸ்லாமிய மத போதகரான நிகார் ஆலம் என்பவர் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டு உள்ளார்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள மர்தான் மாவட்டத்தின் சவல்தெர் கிராமத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு இருக்கின்றனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய அந்த மதகுரு நிகார் ஆலம், அந்த கட்சியையே விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆலமை அடிக்கப் பாய்ந்தனர்.

வெறிகொண்டு பாய்ந்த அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்ட மதகுரு நூற்றுக்கும் மேற்பட்டோரால் கொடூரமாக தாக்கப்பட்டார். அவரது கடைசி மூச்சு நிற்கும் வரை அந்த கும்பல் அவரை அடித்துக்கொண்டே இருந்தது. பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட தெஜ்ரிக் கட்சியினரால் இஸ்லாமிய மதகுரு கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மர்தான் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் ரோகான்ஜெப், “அந்த கும்பல் நிகார் ஆலமை தாக்குவதை பார்த்தவுடன், அவரை அவர்களிடம் இருந்து காப்பாற்றி அருகில் இருந்த மார்க்கெட்டில் உள்ள கடைக்கு அழைத்து வந்து பாதுகாப்பு வழங்கினோம். ஆனால், அந்த கும்பல் கடையை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து அவரை கொடூரமாக தாக்கியது.

அவரை உடல் முழுவதும் குத்தியும், அடித்தும், உதைத்தும் கொடூரமாக கொன்றனர். தாக்குதல் நடந்த இடத்திலேயே ஆலம் உயிரிழந்தார். சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காக ஆலமின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை தரப்பிலேயே புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கின் தீவிரம் கருதி முதல் தகவல் அறிக்கையை சீல் வைத்து உள்ளோம்.

இதற்கிடையே இஸ்லாமிய மதகுரு நிகார் ஆலம் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மதகுருவை கொடூரமாக தாக்கிய கும்பலை தடுக்க முயல்வதும், அதை மீறிக்கொண்டு அவர்கள் கொடூரமாக தாக்குதலில் ஈடுபடுவது பதிவாகி உள்ளது.

Cleric killed in Pakistan by Imran Khans Tehreek-e-Insaf party members

தாக்குதல் நடத்தப்பட்ட இதே மாவட்டத்தில், இதேபோன்ற ஒரு காரணத்துக்காக பல்கலைக்கழக மாணவர் மாஷல் கான் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பலால் அடித்து படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற காரணத்துக்காக லாஹூரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த கைதியை உள்ளே புகுந்து ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. கடந்த 2021 ஆம் அண்டு இலங்கையை சேர்ந்த பிரயந்தா தியாவடனாகே என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொடூரமாக கொன்று தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.