உதகை அருகே அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 34 பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 27ஆம் தேதி உதகை அருகே சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கணிதத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் உதவி செய்ததாக குற்றசாட்டு எழுந்தது.
எனவே அப்பள்ளியில் அறை எண் 3 மற்றும் 4இல் கணிதத் தேர்வு எழுதிய 34 மாணவர்களுக்கு கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு விடைத்தாள் சென்னை தேர்வு துறைக்கு அனுப்பபட்டுள்ளதால் தேர்வு முடிவுகள் இன்று வெளிடவில்லை.
மாணவர்களுக்கு உதவிய விவகாரத்தில் அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகியோரை மாவட்ட பள்ளி கல்வி துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in