ஏஞ்சல்ஸ்: மார்வெல் படங்களில் ஸ்கார்லெட் விட்ச்சாக நடித்து வில்லியாக மிரட்டிய பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் ஓல்சென் சமீபத்தில் ஹெச்பிஓவில் வெளியான லவ் அண்ட் டெத் வெப்சீரிஸில் நடித்துள்ளார்.
அதில், ஏகப்பட்ட நிர்வாணக் காட்சிகளிலும் இன்டிமேட் காட்சிகளிலும் நடித்துள்ளது பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் எலிசபெத் ஓல்சென்னிடம் கேட்கப்பட்டது.
அதற்கு கொஞ்சம் கூட தயங்காமல் நடிகை எலிசபெத் ஓல்சென் அளித்துள்ள பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஸ்கார்லெட் விட்ச்: மார்வெல் தயாரிப்பில் வெளியான வாண்டா விஷன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் உள்ளிட்ட பல அவெஞ்சர் படங்களில் ஸ்கார்லெட் விட்ச்சாக நடித்து மிரட்டியவர் நடிகை எலிசபெத் ஓல்சென்.
மிகப்பெரிய ரசிகர்கள் படையைக் கொண்ட எலிசபெத் ஓல்சென் கடந்த மாத இறுதியில் ஹெச்பிஓவில் வெளியான லவ் அண்ட் டெத் மினி வெப்சீரிஸில் வேறலெவலில் நடித்து தனது ரசிகர்களூக்கு கவர்ச்சி தீனி போட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அந்த வெப்சீரிஸில் நடித்த அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் விரிவாக பேசி உள்ளார் எலிசபெத் ஓல்சென்.

லவ் அண்ட் டெத்: காதல் அல்லது மரணம் என்கிற தலைப்பில் உருவாகி உள்ள வெப்சீரிஸில் கேண்டி மாண்ட்கோமரி எனும் லீடு ரோலில் நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் 27ம் தேதி வெளியான இந்த வெப்சீரிஸ் வெறும் 7 எபிசோடுகள் கொண்ட மினி வெப்சீரிஸாகவே உருவாகி உள்ளது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த வெப்சீரிஸை பார்க்க முடியாது. ஹெச்பிஓ மேக்ஸ் இருந்தால் மட்டும் தான் பார்க்க முடியும் என்கின்றனர். டெக்சாஸில் பக்கத்து பக்கத்து வீட்டில் ரெண்டு ஜோடிகள் வசித்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
அதில், ஒருவர் கையில் கோடரி எடுத்து கொலை செய்ய ஆரம்பிக்க கதை சூடுபிடிக்கிறது. அவர் ஏன் அந்த கொலைகளை செய்கிறார் என்கிற விசாரணையை மையப்படுத்தி இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது. நிஜ சம்பவங்களின் அடிப்படையில் கொண்ட கதை என ட்ரெய்லரிலேயே அறிவித்து வெப்சீரிஸை பார்க்கத் தூண்டுகின்றனர்.

நிர்வாணக் காட்சிகளில் நடித்தது பற்றி: ஸ்கார்லெட் விட்ச்சாக டெரர் பர்ஃபார்மன்ஸ் கொடுக்கும் போது நிர்வாணக் காட்சிகளில் நடிக்கத் தேவையில்லை. ஆனால், குடும்பத்தில் இருக்கும் போது கணவருடன் படுக்கையறை காட்சிகளில் அப்படி நடிக்க வேண்டிய தேவையை கதை தான் உருவாக்குகிறது.
அப்படி ஆடையில்லாமல் நிர்வாணமாக நடிப்பதில் எனக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை. தியேட்டர் நடிகையான நான் அத்தனை பேர் முன்பாகவே என்னுடைய 19 வயதில் இருந்தே நிர்வாணமாக தோன்றி நடித்து வருகிறேன் எனக் கூறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார் எலிசபெத் ஓல்சென்.