கேரள ஆளுனர் ஆரிப் முகம்மது கான் நேற்று முன்தினம் குருவாயூர் சென்றார். அங்கு மடம்பு குஞ்சுட்டான் ஸ்மிருதி பர்வம் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய விழாவில் பங்கேற்ற ஆரிப் முகம்மது கான் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் துலாபாரம் வழங்கி வழிபாடு நடத்த விரும்புவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் துலாபாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள துலாபார மேடையில் அவருடைய எடைக்கு எடை அதாவது 83 கிலோ கொண்ட கதலிப்பழம் துலாபாரமாக வழங்கப்பட்டது. இதையடுத்து கிழக்கு கோபுரத்தின் வெளி நடையில் இருந்து குருவாயூரப்பனை வழிபாடு செய்தார் ஆளுனர் ஆரிப் முகமது கான்.
Manipur: மணிப்பூர் வன்முறையில் 54 பேர் படுகொலை… பலர் மருத்துவமனையில் அனுமதி!
மேலும் வாழைப்பழத்திற்கான விலையாக 4250 ரூபாயை கோவில் கவுண்டரில் செலுத்திய கவர்னர் ஆரிப் முகமது கான் அதற்கான ரசீது பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆரிப் முகமது கான், குருவாயூரில் தரிசனம் செய்வது வார்த்தைகளில் சொல்ல முடியாத ஆன்மீக அனுபவம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தான் இன்னும் பார்க்கவில்லை என்றும் ஆகையால் அந்த விவாதம் குறித்த எந்த விவாதத்திலும் தனக்கு உடன்பாடு இல்லை என்றார். மேலும் அது குறித்து தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார. பிரதமர் நரேந்திர மோடி தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்து இருக்கலாம் என்றும் அதனால் தெரிவித்து இருக்கலாம் என்றும் கூறினார்.
King Charles III crowned: இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடினார் சார்லஸ்… ராணி ஆனார் கமிலா!
மேலும் இப்படத்தின் கருப்பொருள் உண்மை சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் ஆளுனர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் துலா பாரம் வழங்கிய ஆளுநர் ஆரிப் கானுக்கு, கோவில் தேவசம் சார்பில் அதன் தலைவர் டாக்டர் விகே விஜயன் பிரசாதம் வழங்கினார். அதில் திருமுடி மாலை, பட்டு, பாயாசம் ஆகியவை இருந்தன.
கேரள கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கான், முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகிய ஆரிப் முகமது கான் பாஜகவில் இணைந்தார். முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார் ஆரிப் முகமுது கான். கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கேரள கவர்னராக இருந்து வருகிறார் ஆரிப் கான்.