இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடி சூட்டு விழாவில் மர்ம உருவம் ஒன்று நடந்து செல்லும் வீடியோ வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது.
மன்னர் முடிசூட்டு விழாகடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செம்படர் மாதம் காலமானார். இதையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிறகு அரச பணிகளை கவனித்து வந்த மூன்றாம் சார்லஸ் கடந்த 6 ஆம் தேதி முறைப்படி மன்னராக முடி சூடிக்கொண்டார். 12th Result: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எத்தனை பாடங்களில் எவ்வளவு பேர் 100க்கு 100?
மன்னர் ஊர்வலம்70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முடிசூட்டு விழா என்பதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே லண்டன் மாநகரம் விழாக்கோலம் பூண்டுவிட்டது. முடி சூட்டு விழாவை இங்கிலாந்து மக்கள் ஆர்வத்துடன் எதிர்கொண்டிருந்தனர். கடந்த 6 ஆம் தேதி பக்கிங்காம் அரண்மனையில் இருந்து மன்னர் மூன்றாம் சார்லஸும் அவரது மனைவி கமீலாவும் மன்னர் குடும்பத்தின் பாரம்பரிய தங்க முலாம் பூசப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்திற்கு வருகை புரிந்தனர்.
12th Result: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. அடித்து தூக்கிய விருதுநகர்.. மாநிலத்திலேயே முதலிடம்!
பாரம்பரிய சடங்குகள்பின்னர் பிரமாண பத்திரங்கள் வாசித்து கையெழுத்திட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் மீது உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் தங்க அங்கி அணிந்து, அரச குடும்ப சிம்மாசனத்தில் பாரம்பரிய சடங்குகளை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு அரச குடும்பத்தின் வீரவாள், உலக உருண்டை, மோதிரம், செங்கோள் ஆகியவை வழங்கப்பட்டன.
Kerala: குருவாயூர் கோவிலில் எடைக்கு எடை வாழைப்பழத்தை துலாபாரமாக வழங்கிய ஆளுநர்!
பகீர் கிளப்பும் வீடியோஇதனை தொடர்ந்து புனித எட்வர்டின் கிரீடம் சூடப்பட்டு முறைப்படி மன்னரானார் மூன்றாம் சார்லஸ். இதேபோல் மன்னர் சார்லஸின் மனைவி கமீலாவும் மகுடம் சூட்டப்பட்டு ராணியானார். மன்னரின் முடி சூட்டு விழாவுக்கு பிறகான கொண்டாட்டங்கள் இங்கிலாந்து நகரங்களில் களைக்கட்டியுள்ளன. முக்கிய நகரங்களின் வீதிகளில் தெரு பார்ட்டிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முடி சூட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. Cyclone Mocha: ‘மோக்கா’ மிகத் தீவிர புயலாக மாறும்.. யாருக்கு ஆபத்து? ஆந்திர வெதர்மேன் தகவல்!
மர்ம உருவம்
அதாவது மன்னர் மூன்றாம் சார்லஸ் முடி சூட்டிக் கொள்ளும் போது மர்ம உருவம் ஒன்று நடந்து செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. அரிவாளைப் போன்ற ஒன்றைச் சுமந்து கொண்டு முகமூடி அணிந்த, கறுப்பு நிற ஆடை அணிந்த உருவம் ஒன்று கையில் அரிவாளைப் போன்ற ஒரு நீண்ட தடியை சுமந்துக் கொண்டு செல்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் மன்னரின் முடிசூட்டு விழாவில் பேய் ஒன்று பங்கேற்றதாக கூறி வருகின்றனர்.
வைரலாகும் வீடியோமேலும் சிலர், மத குருக்களின் உறுப்பினராக இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். ஆனாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் இது அமானுஷ்யம்தான் என கூறி வருகின்றனர். மேலும் பலர் இந்த வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் கூறி வருகின்றனர். இந்த வீடியோவை இதுவரை 3.6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மன்னர் சார்லஸின் முடி சூட்டு விழாவில் மர்ம உருவம் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம உருவத்தின் வீடியோ
Grim Reaper at King Charles’ Coronation