இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கடந்த சில மாதங்களாக எங்கு திரும்பினாலும் லியோ படத்தை பற்றிய பேச்சு தான் போய்க்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே செல்கின்றது. சொல்லப்போனால் பொதுவாக விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட இப்படத்திற்கு கூடுதலான எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
அதற்கு மிகமுக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். அவரின் முந்தைய படமான விக்ரம் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை அவரின் ஸ்டைலில் இயக்கி ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைத்தார் லோகேஷ் கனகராஜ். அதே போல லியோ படத்திலும் விஜய்யை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் காட்ட இருப்பதால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
Lal salaam: லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்..அடேங்கப்பா..!
மேலும் லியோ படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலும் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி வருகின்றது. சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலி கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றது. குறிப்பாக 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா லியோ படத்தில் நடித்து வருகின்றார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதெல்லாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் படமாக்கப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகின்றது. இப்படப்பிடிப்பில் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றதாம்.
குறிப்பாக விஜய் மற்றும் த்ரிஷா இடையேயான ரொமான்டிக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் அர்ஜுன் லியோ படப்பிடிப்பில் இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது லியோ படத்திலிருந்து வெளியான அறிவிப்பு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பிரபல நடிகர் மன்சூர் அலி கான் தற்போது லியோ படப்பிடிப்பில் இணைந்துள்ளாராம். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகரான மன்சூர் அலி கான் லியோ படத்தில் நடிப்பதாக பல மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் இதுவரை படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமலே இருந்தார்.எனவே ரசிகர்கள் மன்சூர் அலி கான் லியோ படத்தில் நடிக்கிறாரா இல்லையா என கவலையில் இருந்தனர். இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி மன்சூர் அலி கான் லியோ படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என தகவல் வந்துள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் குஷியில் இருக்கின்றனர். லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலி கானின் தீவிர ரசிகர் என்பதை பலமுறை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். எனவே லியோ படத்தில் மன்சூர் அலி கானுக்கு தரமான ஒரு கதாபாத்திரம் கொடுத்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.