இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Thalapathy Vijay: அண்ணன் விஜய் சொன்னபடி லியோ படப்பிடிப்பை நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
லியோமாஸ்டரை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த ஷெட்யூலில் த்ரிஷா கலந்து கொண்டுள்ளார். அவரின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் கேக் ஏற்பாடு செய்து அசத்தியது படக்கழு. சில வாரங்கள் சென்னையில் தான் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இதையடுத்து கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க ஹைதராபாத் செல்கிறது லியோ படக்குழு.
சிவகார்த்திகேயன்நான் Rajini Sir Style-ல தான் நடிக்கிறேன் – Sivakarthikeyan fantastic speech
ஹைதராபாத்சென்னையை அடுத்து ஹைதராபாத்தில் அவுட்டோர் லொகேஷனில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க திட்டமிட்டார் லோகேஷ். இதையடுத்து அவுட்டோர் ஷூட்டிங் வேண்டாம் தம்பி என லோகேஷிடம் கூறினாராம் விஜய். காஷ்மீரில் அவுட்டோரில் படப்பிடிப்பை நடத்த சிரமப்பட்டிருக்கிறார்கள். அதை மனதில் வைத்து தான் மீண்டும் அவுட்டோர் ஷூட்டிங் வேண்டாம் என லோகேஷ் கனகராஜிடம் கூறினாராம் விஜய்.
Leo: பட்டது போதும், இனிமே வேணாம்டா தம்பி: லோகேஷ் கனகராஜிடம் கறாராக சொன்ன விஜய்
லோகேஷ்விஜய் கூறியதில் இருக்கும் உண்மையை புரிந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் ஹைதராபாத்தில் அவுட்டோரில் ஷூட்டிங் நடத்தும் திட்டத்தை கைவிட்டுள்ளார். ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. ஆனால் அவுட்டோரில் அல்ல விஜய் பரிந்துரை செய்தபடி ஃபிலிம் சிட்டியில் தான். விஜய்யுடன் வேலை செய்யத் துவங்கிய பிறகு அவரை தன் சொந்த அண்ணனாகவே பார்க்கிறார் லோகேஷ். அதனால் விஜய் ஏதாவது அறிவுரை வழங்கினால் அதை ஏற்று நடக்கிறார்.
அர்ஜுன்லியோ படத்தில் அர்ஜுன், சஞ்தய் தத், மதுசூதன் ராவ், கவுதம் மேனன், மிஷ்கின் என ஏகப்பட்ட வில்லன்கள் இருக்கிறார்கள். அதில் அர்ஜுன் கதாபாத்திரத்தை மிகவும் ரகசியமாக வைத்து வருகிறார் லோகேஷ். தற்போது சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பில் அர்ஜுன் கலந்து கொண்டிருக்கிறாராம். காஷ்மீரை அடுத்து சென்னை ஷெட்யூலிலும் கலந்து கொள்கிறாராம் சஞ்சய் தத்.
கதைலியோ படத்தின் கதை எல்.சி.யூ.வா என லோகேஷ் கனகராஜிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அதை மட்டும் சொல்ல மாட்டேனே என அடம்பிடிக்கிறார் லோகேஷ். விருது விழாவுக்கு வந்த இடத்தில் மேடையில் வைத்து கேட்டால் சொல்லிவிடுவார் என்று நினைத்து கேட்டார்கள். அப்பொழுது கூட சொல்லவில்லையே. படத்தை பார்த்து தெரிந்துகொள்ளட்டும் என ஷூட்டிங்கை நல்லபடியாக நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ்.
குழப்பம்லோகேஷின் எல்.சி.யூவில் இருக்கும் விஜய் சேதுபதி லியோ படத்தில் இல்லை. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், நீங்கள் லியோவில் நடிக்கிறீர்களா இல்லையா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நான் லியோ படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டார். அதே சமயம் லியோவில் கமல் ஹாசன் இருப்பதாக கலை இயக்குநர் சூசகமாக சமூக வலைதளத்தில் தெரிவித்தார். அதனால் ஒரே குழப்பத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
Leo, Kamal Haasan: விஜய் படத்தில் கமல் ஹாசன்: போட்டோ வெளியிட்ட லியோ பட பிரபலம்
கவுதம் மேனன்லியோ படத்தில் நடித்தது பற்றி கவுதம் மேனன் கூறியிருப்பதாவது, நான் லோகேஷ் கனகராஜுக்காக இந்த படத்தில் நடித்திருக்கிறேன். விக்ரம் படத்தில் நடிக்க கேட்டார். ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் நடிக்க முடியவில்லை. பின்னர் லியோ படத்தில் நடிக்க அழைத்தார். நான் படம் முழுக்க விஜய்யுடன் வருவது போன்ற ஒரு கதாபாத்திரம் என்றார்.