Priya Bhavanishankar: காதலரை உப்புமூட்டை தூக்கிய ப்ரியா பவானிசங்கர்: ஸ்டிராங்கான லேடி தான்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Priya Bhavanishankar, Rajvel: தன் காதலர் ராஜ்வேலுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பிரேக்கப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ப்ரியா பவானிசங்கர்.

​ப்ரியா​கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து ராஜ்வேலை காதலித்து வருகிறார் ப்ரியா பவானிசங்கர். காதலை மறைக்காதவர் அவர். ராஜ்வேல் தான் தன் காதலர் என்பதை வெளிப்படையாக கூறி வருகிறார். மேலும் தானும், ராஜ்வேலும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவர்களுக்கு இடையேயான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
ஐஸ்வர்யா தத்தாமேடையில் உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா தத்தா!
​பிரேக்கப் வதந்தி​ப்ரியா பவானிசங்கருக்கும், ராஜ்வேலுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும் அவர்கள் பிரிந்துவிட்டதாக அவ்வப்போது பேச்சு கிளம்புவதும், அடங்குவதுமாக உள்ளது. சில நேரம் அந்த பிரேக்கப் தகவல் குறித்து ப்ரியாவே காமெடியாக போஸ்ட் போட்டு கலாய்க்கவும் செய்திருக்கிறார். இந்நிலையில் தான் ராஜ்வேலும், ப்ரியா பவானிசங்கரும் பிரிந்துவிட்டதாக மீண்டும் பேச்சு கிளம்பியது.
​ரொமான்ஸ்​பிரேக்கப் பேச்சு கிளம்பிய நிலையில் தான் ராஜ்வேலை உப்புமூட்டை தூக்கியபோது, அவருடன் சேர்ந்து சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை சேர்த்து ஒரு வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ப்ரியா. இதன் மூலம் தானும், ராஜ்வேலும் பிரியவில்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டார்.
வீடியோView this post on InstagramA post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)
​சுற்றுலா​ராஜ்வேலுக்கும், ப்ரியா பவானிசங்கருக்கும் ஊர் சுற்றிப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஷூட்டிங் இல்லை என்றால் காதலரை அழைத்துக் கொண்டு எங்காவது கிளம்பிவிடுகிறார். இருவரும் சேர்ந்து இதுவரை பல நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார்கள். இந்த ஜோடி உலகம் சுற்றும் சூப்பர் ஜோடியாகும். இந்நிலையில் தான் அப்படி ஊர் சுற்றிப் பார்த்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார் ப்ரியா.

​பங்களா​ப்ரியா நல்ல அழகி மட்டும் அல்ல சிறந்த நடிகையும் ஆவார். மேலும் அறிவாளியும் கூட. பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் ப்ரியா பவானிசங்கருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். கெரியரிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருந்து வருகிறார். காதலர் ராஜ்வேலுடன் சேர்ந்து கடற்கரையோரம் பங்களா கட்டி குடியேறினார். 18 வயதில் கண்ட கனவு தற்போது நிறைவேறியிருக்கிறது.

​Naga Chaitanya: சமந்தா அருமையானவர், அவருடன் வாழ்ந்த வாழ்க்கை மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்: நாக சைதன்யா

​படங்கள்​ப்ரியா பவானிசங்கரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ருத்ரன். அதில் ராகவா லாரன்ஸின் காதல் மனைவியாக நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . மேலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

​Vikram: நான் உன் மாணவனா, வாள் பயிற்சி கொடுத்தியா?: யூடியூப் பிரபலத்தை அதிர வைத்த விக்ரம்​
​நடிப்பு​படங்கள் தவிர்த்து வெப்தொடர்களிலும் கவனத்து செலுத்திக் கொண்டிருக்கிறார் ப்ரியா பவானிசங்கர். நாக சைதன்யாவுடன் சேர்ந்து தூதா தெலுங்கு வெப்தொடரிலும் நடித்து அசத்தினார். படமாகட்டும், வெப்தொடராகட்டும் எதில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். யாரும் அவர் நடிப்பை பற்றி குறை சொல்லவே முடியாது. அது தான் ப்ரியாவின் ஸ்பெஷாலிட்டி ஆகும். ராஜ்வேலை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும். நடிப்பை மட்டும் கைவிடக் கூடாது ப்ரியா என்பது தான் ரசிகர்கள் அடிக்கடி விடுக்கும் கோரிக்கை.

​Vidaa Muyarchi: விடாமுயற்சி ஷூட்டிங் எப்போ துவங்குது, எத்தனை நாள் நடக்கப் போகுதுனு தெரியுமா?​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.