Rajinikanth Lal Salaam Moideen Bhai: மொய்தீன் பாயாக மும்பை திரும்பிய பாட்ஷா பாய் ரஜினிகாந்த்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இஸ்லாமியராக நடிக்கிறார் என தகவல் வெளியானது. இந்நிலையில் ரஜினிக்கு மொய்தீன் பாய் என பெயர் வைத்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

மேடையில் உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா தத்தா!
லால் சலாம் படத்தின் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடக்கிறது. இதையடுத்து சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு சென்றார் ரஜினி. விமான நிலையத்தில் அவரின் எளிமையான உடை, விறுவிறுப்பான நடை, க்யூட்டான ஸ்மைலை பார்த்து ரசிகர்கள் அசந்து போனார்கள்.

Rajinikanth: லால் சலாம் ஷூட்டிங்கிற்காக மும்பை பறந்த ரஜினி: அந்த நடை, அந்த ஸ்மைல், ப்ப்பா

ரஜினியை பார்த்ததும் தலைவா ஜெயிலர் வீடியோ சூப்பர் என ரசிகர்கள் தெரிவித்தனர். அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த ரஜினி நன்றி தெரிவித்துவிட்டு கிளம்பினார்.

முன்னதாக பாட்ஷா படத்தில் தன் நண்பன் அன்வர் கொலை செய்யப்பட்ட பிறகு மாணிக்கமாக இருந்த ரஜினி பாட்ஷா பாயாக மாறினார். இதையடுத்து பல ஆண்டுகள் கழித்து தற்போது மொய்தீன் பாயாக மாறியிருக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பாட்ஷா பாய் ஆட்சி செய்த அதே மும்பையில் தான் மொய்தீன் பாயும் இருக்கிறார். மொய்தீன் பாயை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ன சம்பவம் செய்யப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் துடிக்கிறார்கள். ஆனால் ரஜினி பற்றிய தகவல்களை கசியவிடாமல் உஷாராக இருக்கிறார் ஐஸ்வர்யா.

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் தான் வருகிறார். இருப்பினும் ஒரு மணிநேரம் மொய்தீன் பாயை திரையில் பார்க்கலாமாம். லால் சலாம் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், ஜீவிதா ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

மேலும் இயக்குநர் செல்வராகவனும் லால் சலாம் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. செல்வராகவனை தன் கணவர் தனுஷின் அண்ணனாக இல்லை தன் இன்னொரு அப்பாவாக பார்க்கிறார் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மொய்தீன் பாய் கெட்டப் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் தலைவருக்கு ஒரு போஸ்டர் போதாது. வேறு கெட்டப்பில் இன்னொரு போஸ்டரை விரைவில் வெளியிடுங்கள் என ஐஸ்வர்யாவிடம் ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் புது போஸ்டருக்காக சிலர் ஐடியாவும் கொடுத்திருக்கிறார்கள்.

தன் அப்பாவை இயக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ஆசைப்பட்டார். அவரின் கம்பேக் படத்திலேயே அந்த ஆசை நிறைவேறிவிட்டது. அது என்ன கம்பேக் படம் என்று கேட்கிறீர்களா?

3 படம் மூலம் இயக்குநரான ஐஸ்வர்யா தன் மகன்கள் யாத்ரா, லிங்கா கொஞ்சம் வளரட்டும் என படம் இயக்குவதை நிறுத்தி வைத்திருந்தார். தற்போது மகன்கள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் படம் இயக்கி வருகிறார்.

ஒரு பிரேக்கிற்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஐஸ்வர்யா தான் இதுவரை ஷூட் செய்த காட்சிகளை அப்பாவிடம் போட்டுக் காட்டியிருக்கிறார். அதை பார்த்த ரஜினி இம்பிரஸ்ஸாகி மகளை பாராட்டினாராம். தலைவரே பாராட்டிய சந்தோஷத்தில் மீதமுள்ள காட்சிகளை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா.

மும்பையை ஒரு கலக்கு கலக்கிய பாட்ஷா பாய் போன்று மொய்தீன் பாயும் கலக்குவார் என்று நம்பப்படுகிறது. பாட்ஷா படம் ரிலீஸாகி 28 ஆண்டுகள் ஆனபோதிலும் பாயை யாரும் இன்னும் மறக்கவில்லை, மறக்கவும் முடியாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.