நாட்டின் பிரபலமான சிறைகளில் ஒன்று டெல்லி திகார் சிறை. பாதுகாப்புக்கு பெயர் போன இந்த சிறையில் கடந்த 2 ஆம் தேதி பிரபல ரவுடியான 33 வயது சுனில் தில்லு தாஜ்பூரியா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சுனில் தில்லு தாஜ்பூரியா மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Cyclone Mocha: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… நாளை மறுநாள் புயலாக மாறும்!
திகார் சிறையில் முதல் தளத்தில் இருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தரை தளத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்த மற்ற சில ரவுடிகளான ஜிதேந்திர கோகி, யோகேஷ் துண்டா மற்றும் அவரது கூட்டாளிகள் ஏற்கனவே அவரை கொலை செய்ய முயற்சித்தனர். இதையடுத்து அவர்கள் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி காலை 6 மணி அளவில் எக்ஸாஸ்ட் ஃபேன் வழியாக போர்வைகள் மூலம் கீழே இறங்கிய அவர்கள் சிறையில் இருந்த சுனில் தில்லு தாஜ்பூரியாவை வெளியே இழுத்துப்போட்டு கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும் அவரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றனர். சுமார் 90 முறை தில்லு தாஜ்பூரியா கத்தியால் குத்தப்பட்டார்.
King Charles III: மன்னரின் முடி சூட்டு விழாவில் பேய்… பகீர் கிளப்பும் வீடியோ!
அவரது உடம்பில் சுமார் 100 வெட்டுக்காயங்கள் இருந்தன. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வீடியோ கடந்த வெள்ளிக் கிழமை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தில்லு தாஜ்பூரியா அடித்துக் கொல்லப்பட்ட போது அங்கு இருந்த 9 போலீசார் அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீசார் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக திகார் ஜெயில் நிர்வாகம் இதுவரை உதவி கண்காணிப்பாளர் உள்பட 9 அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது. இதில் தமிழக சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த 7 பேர் இடை நீக்கம் செய்யப்பபட்டனர். அவர்கள் தற்போது தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இது குறித்த அறிக்கையை திகார் ஜெயில் நிர்வாகம் டெல்லி துணை நிலை கமிஷனருக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி ஹைகோர்ட், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளது.
12th Result: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எத்தனை பாடங்களில் எவ்வளவு பேர் 100க்கு 100?
சுனில் தில்லு தாஜ்பூரியாவின் தந்தை மற்றும் சகோதரர் இந்த கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்றும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த தவறுக்கு காரணமான அதிகாரிகளின் பொறுப்பு மற்றும் பொறுப்புணர்வை விளக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.