இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவில் தன் நகைச்சவையால் தனி முத்திரை பதித்த நடிகர் தான் வடிவேலு.கடந்த 30 ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறி இன்று உச்சபச்ச நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார். இடையில் சில பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் காரணமாக படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது மீண்டும் பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.
இடையில் வடிவேலு நடிக்காமல் இருந்த காலகட்டங்களில் மீம்ஸ் மூலமும், சானல்களில் இவரின் நகைச்சுவைகள் மூலமும் ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் வடிவேலு. இவரின் முகத்தை பார்க்காமல் ஒரு நாளை ரசிகர்களால் கடக்கமுடியாது என்றே சொல்லலாம்.
Lal salaam: லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்..அடேங்கப்பா..!
இந்நிலையில் வடிவேலு சமீபத்தில் ஹீரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் தற்போது நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியின் நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் படத்தில் வடிவேலு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இப்படத்தில் வடிவேலு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சிறப்பான ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் இப்படத்தில் அவரின் நடிப்பை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். குறிப்பாக நடிகர்
உதயநிதி
இப்படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலக இருப்பதால் இதுவே இவரின் கடைசி படமாக இருக்கும்.
எனவே இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படம் ஜூன் மாதம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது இப்படத்திலிருந்து வெளியான ஒரு தகவல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மாமன்னன் படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளாராம். சமீபத்தில் தான் இப்பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த செய்தி ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் ரசிகர்களையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இப்படத்திற்கு பிறகு வடிவேலு தன் இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக துவங்குவார் என்பது உறுதி என பலர் கூறி வருகின்றனர், இந்நிலையில் ஒரு பேட்டியில் உதயநிதி பேசுகையில், மாமன்னன் என்ற தலைப்பே வடிவேலுவின் கதாபாத்திரத்தை தான் குறிக்கின்றது. அந்த அளவிற்கு படத்தில் முக்கியமான ரோலில் நடித்து அசத்தியுள்ளார் வடிவேலு என கூறினார் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது.