அமெரிக்காவில் ஒற்றை பெண் பயணிக்கு எதிராக: விமானத்திற்குள் நடந்த வாக்கெடுப்பு: வீடியோ


அமெரிக்காவில் விமானம் ஒன்றில் பயணி ஒருவர் ரகளை ஈடுபட்டத்தை தொடர்ந்து அவரை பிற பயணிகள் சேர்ந்து வெளியேற்றியுள்ளனர். இதற்காக அவர்கள் பயன்படுத்தியுள்ள வழிமுறை அனைவரையும் ஈர்த்துள்ளது.

ரகளையில் ஈடுபட்ட பயணி

அமெரிக்காவில் நியூஜெர்சி பகுதியில் இருந்து அட்லாண்டாவிற்கு செல்வதற்காக விமானம் ஒன்று தயாராகி கொண்டு இருக்கும் போது, அதில் விமான பெண் பயணி ஒருவர் இருக்கையை மாற்ற கோரி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

மற்ற பயணிகள் அனைவரும் தங்களது இருக்கைகளில் அமர்ந்து கொண்டு விமான பயணத்திற்கு தயார் ஆகி கொண்டு இருக்கும் போது, அந்த ஒற்றை பெண் பயணி மட்டும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார்.

இது பிற பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது, இதனால் ரகளை ஈடுபட்ட அந்த பெண்ணை வெளியேற்ற மற்ற பயணிகள் முடிவு செய்தனர்.

வாக்கெடுப்பு நடத்திய விமான பயணிகள்

இதையடுத்து விமானத்தில் இருந்து பயணியை வெளியேற்ற பிற பயணிகளுக்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 
அதில் சம்பந்தப்பட்ட பெண்ணை வெளியேற்ற விரும்புவோர் தங்கள் கைகளை தூக்கி வாக்குகளை அளித்தனர்.

அமெரிக்காவில் ஒற்றை பெண் பயணிக்கு எதிராக: விமானத்திற்குள் நடந்த வாக்கெடுப்பு: வீடியோ | Flight Passengers Hold Vote In Us To Expel Co Pass

இந்த வாக்கெடுப்பு, ரகளையில் ஈடுபட்ட பயணிக்கு எதிராக அமையவே அந்த பெண் பயணி உடனடியாக வெளியேற்றப்பட்டு விமானம் புறப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது அதிக கவனம் ஈர்த்து வருகிறது.

சமீபமாக விமானத்தில் பயணிகள் மிகவும் தீவிரமாக நடந்து கொள்வது, விமானத்தின் காக்பிட்-க்குள் நுழைய முற்படுவது ஆகிய அத்துமீறல் செயல் அதிகரித்து கொண்டே வருகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.