தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பதற்காக ஆளுநர் மாளிகைக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க செல்கிறார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அமைச்சரவையில் முதல்வருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள துரைமுருகன் ஆளுநரை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மே 23ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முக்கிய அமைச்சர்களின் இலாக்கா மாற்றம், ஓரிரு அமைச்சர்களின் பதவி பறிப்பு, புதியவர்களுக்கு வாய்ப்பு ஆகியவை நிகழ் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அமைச்சர் துரைமுருகன் ஆளுநரை சந்திப்பது அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அது உறுதியானால் இந்த வாரத்தில்கூட புதிய அமைச்சரவை பதவி ஏற்கலாம் என்கிறார்கள்.