தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் 27 மாவட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப்புற பால் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்து, ஒன்றியங்கள் மற்றும் இணைய பால்பண்ணைகளில் சுகாதாரமான முறையில் பதப்படுத்தப்பட்டு, தமிழகமெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து வருகிறது. தற்பொழுது ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. கடந்தாண்டு சராசரி பால் விற்பனையைவிட 3 இலட்சம் லிட்டர் அதிகரித்திருக்கிறது.
மேலும், ஆவின் பால், பால் பொருட்கள், இனிப்பு வகைகள் தரமாக இருப்பதோடு தனியாரை விட விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் நலன் கருதி, வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டம் செய்யப்பட்ட பசும் பால் (பர்ப்பிள் நிற பால் பாக்கெட்) இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.செறிவூட்டப்பட்ட பால் ஊதா (பர்ப்பிள்) நிற பால் பாக்கெட்டில் கிடைக்கும். அரை லிட்டர் பால் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் செறிவூட்டம் செய்யப்பட்ட ஆவின் பசும் பால் வகையினை வாங்கி பயன்டுத்துவதினால் உடலுக்கு தேவையான வைட்டமின் A மற்றும் D கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.