இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் சலுகைக்காலம் நீடிப்பு


இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவதற்கான சலுகைக்காலத்தினை இந்தியா ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது.

இந்த 1 பில்லியன் கடன் சலுகைக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்திருந்த நிலையில்,  பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2024 மார்ச் வரை சலுகைக்காலம்
நீடிக்கப்பட்டுள்ளது என இலங்கையின் பிரதி திறைசேரி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க இன்று(09.05.2023) ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

பெற்றுக்கொண்ட கடன் வசதியின் அடிப்படையில்
350 மில்லியன் டொலர் மீதம் உள்ளதாகவும் அதனை தேவைக்கேற்ப பயன்படுத்தப்படலாம்
எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் சலுகைக்காலம் நீடிப்பு | Extension Of Loan Period Granted By India

இணையவழி சந்திப்பு

கடந்த ஆண்டு இலங்கையின் நிதி
நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது இந்தியாவினால் வழங்கப்பட்ட அவசர உதவியில்
சுமார் 4 பில்லியன் டாலர்கள் கடன் வரியின் ஒரு பகுதியாகவே இந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது.

இதேவேளை இலங்கையின் கடனை மறுசீரமைப்பதை ஒருங்கிணைக்க இலங்கைக்கு கடன்
வழங்கும் நாடுகள் இன்றையதினம் இணைய வழி சந்திப்பை நடத்துகின்ற நிலையில் சீனா  கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.